VIDEO: 'ஃபேஷியல் பண்றதுக்கு முன்னாடி நான் இப்படி தான் இருந்தேன்'... 'ஆனா இப்போ என் முகம்'... இளம்பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாபியூட்டி பார்லரில் ஃபேஷியல் செய்த பெண்ணுக்கு முகம் சிதைந்து தீ காயம் போல் ஆன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம், சில்சார் பகுதியைச் சேர்ந்த பினிதா நாத் என்னும் முன்னாள் ஐஐடி மாணவி, இத்தாலியில் போஸ்ட்-டாக்டரேட் பயின்று வருகிறார்.
உறவினரின் திருமணத்துக்காக அசாம் வந்திருந்த அவர், சொந்த ஊரான சில்சாரில் இருக்கும் சாரதா பியூட்டி பார்லருக்கு பேஷியல் செய்வதற்காக சென்றுள்ளார்.
இதுகுறித்து, பினிதா பதிவு செய்துள்ள ஃபேஸ்புக் போஸ்ட்டில், "பொதுவாக நான் ஃபேஷியல் செய்துகொள்ளும் வழக்கம் கொண்டவள் அல்ல. புருவத்தை சரிசெய்யும் த்ரெட்டிங் என்னும் முறையை கூட அதிகமாக செய்துகொண்டதில்லை. திருமணத்துக்கு செல்ல வேண்டியிருந்ததால், ஃபேஷியல் செய்துகொள்வதற்காக சாரதா ப்யூட்டி பார்லருக்கு சென்றேன்.
ஃபேஷியல் செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டதும், Detan facial ஐ பரிந்துரை செய்தனர். ஃபேஷியல் செய்து முடித்ததும், ப்ளீச் செய்யலாம் என பரிந்துரைத்தார்கள்.
ப்ளீச் க்ரீமை முகத்தில் தடவியதும், கொதிக்கும் எண்ணெய் ஊற்றப்பட்டதாக உணர்ந்தேன். வலியால் துடிக்க ஆரம்பித்த நான், ஐஸ்கட்டிகளையும் வைத்தேன். எனினும், முகம் தீக்காயமடைந்ததை போல மிகவும் மோசமாகிவிட்டது.
இதற்கு பார்லர் நடத்திவரும் பெண்ணும் எந்த பதிலும் அளிக்கவில்லை. அவர்கள் தரப்பில் எந்த விளக்கத்தையும் கொடுக்கத் தயாராக இல்லை" என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, பார்லரின் உரிமையாளர்கள் தரப்பில், "பினிதாவிடம் ஃபேஷியலுக்கு பிறகு ப்ளீச் செய்வது உகந்தது அல்ல என்று தெரிவிக்கப்பட்டதாகவும், பினிதா வற்புறுத்தி ப்ளீச் செய்யச் சொன்னார்" எனவும் பதிலளிக்கப்பட்டுள்ளது.
Video Credit: way2barak

மற்ற செய்திகள்
