'5 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்...' 'வீடு முழுக்க சிறுவர் ஆபாசப் பட சிடிக்கள்...' 'தோண்ட தோண்ட கிடைத்த பொருட்கள்...' - அதிர்ச்சிக்கு மேல் பேரதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாசிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி தலைமறைவாகியுள்ள செய்தித்தாள் உரிமையாளர் பியாரே மியனின் வீடுகளில் இருந்து ஆபாச சி.டி.க்கள், மது பாட்டில்கள் மற்றும் காட்டு விலங்குகளின் எலும்புகள் போலீசாரால் கைப்பற்றப்பட்டன.
போபாலை பூர்வவீகமாக கொண்ட செய்தித்தாள் உரிமையாளர் பியாரே மியான்(68) மீது இதுவரை ஐந்து சிறுமிகள் மற்றும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளனர். இதன் காரணமாக தப்பியோடிய மியானின் வீட்டில் நடைபெற்ற சோதனைகளில் பலவிதமான பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பியாரே மியான் போபாலில் இருக்கும் அவரின் ஆடம்பரமான வீடுகளுக்கு சிறுமிகளை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதுகுறித்து கூறிய போபால், சாய் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணா தோட்டா பி.டி.ஐ, 'கடந்த இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது போபால் மற்றும் இந்தூரில் இருக்கும் மியானின் ஐந்து வீடுகளில் இருந்து ஆபாச சி.டி.க்கள், டிவிடிகள், பென் டிரைவ்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சிறுவர் ஆபாச படங்களும் இருந்தது' எனத் தெரிவித்துள்ளார். மேலும், சோதனையின்போது விலையுயர்ந்த மதுபானங்களையும் அதைத்தவிர காட்டு விலங்குகளின் எலும்புகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் விலையுயர்ந்த ஆடி மற்றும் பஜெரோ கார்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழுவின் (எஸ்ஐடி) தலைவரான தோட்டா செய்தியாளர்களிடம், 'இதுவரை நான்கு சிறு சிறுமிகள் மற்றும் ஒரு பெண்ணும் மியான் மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளனர். மேலும் சமீபமாக கோ-இ-பிசா காவல் நிலையத்தில் கடந்த செவ்வாய் கிழமை சிறுமியால் பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டது' என்று கூறினார்.
இதன்காரணமாக செய்தித்தாள் உரிமையாளர் பியாரே மியான் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (போக்ஸோ) கீழ் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் மியான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் காட்டு விலங்குகளின் தோல்கள் மற்றும் எலும்புகள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக கலால் சட்டம் மற்றும் வனவிலங்கு சட்டம் ஆகியவை சேர்க்கப்பட்டன. மைனர் சிறுமிகளில் இருவர் எஸ்சி / எஸ்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எஸ்சி / எஸ்டி சட்டத்தின் பிரிவுகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன என போலீசார் தெரிவித்துள்ளனர்.