நள்ளிரவில் பயங்கரம்...! - 'தீரன் பட பாணியில் வீடு புகுந்து...' 'இரும்பு ராடால் கொடூரமாக...' யார் இவர்கள்...?சிவகங்கையில் நடந்த இரட்டை கொலை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே வீடு புகுந்து ராணுவ வீரரின் அம்மா மற்றும் மனைவியை மர்ம நபர்கள் இரும்பு ராடால் அடித்து கொலை செய்து விட்டு, வீட்டில் இருந்த 65 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முடுக்குரணி என்ற கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஸ்டீபன். இவரது தாய், தந்தை, மனைவி, குழந்தை ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு ஸ்டீபனின் தந்தையும் முன்னாள் ராணுவ வீரர் சந்தியாகு என்பவருடன் சேர்ந்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்ற நிலையில், சந்தியாகுவின் மனைவி ராஜகுமாரி வீட்டிற்கு வெளியிலும், ஸ்டீபனின் மனைவி சினேகாவும், அவர்களது 7 மாத குழந்தையும் வீட்டிற்குள்ளும் படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, வந்த சில மர்ம நபர்கள், முதலில், வெளியே தூங்கிக் கொண்டிருந்த ராஜகுமாரியை தலைகாணியை வைத்து அமுக்கி கொலை செய்ய முயன்றுள்ளார்கள். பின்னர், ராஜகுமாரியை பெரிய இரும்பு ராடை கொண்டு மிகக் கொடூரமாக தாக்கியுள்ளார்கள்.
இதனை அடுத்து வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த சினேகாவையும் குழந்தையின் கண் முன்னே இரும்பு ராடை கொண்டு அரக்கத் தனமாக தாக்கியுள்ளனர். இதில், ராஜகுமாரியும், சினேகாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், விடிந்தபின் குழந்தையின் அழுகுரல் கேட்டு வந்து பார்த்த அக்கம்பக்கத்தினர், இரண்டு பேரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த ராமநாதாபுரம் எஸ்.பி. வருண்குமார் தலைமையிலான போலீசார் தடயங்களை சேகரித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 65 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு உடல்களையும் கைப்பற்றிய போலீசார், சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
