'5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை...' 'கண்ணு முன்னால வச்சு அண்ணனை கொன்னுட்டு...' 'வெறிநாய் போல் கடித்து குதறிய கொடூரம்...' - கிணத்துக்குள்ள அலறி துடித்த சிறுமி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாசத்தீஸ்கர் மாநிலத்தில் 17 வயது சிறுவன் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, பின்னர் கிணற்றில் வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![chhattisgarh koriya minor rape 5yr old girl throw into well kill chhattisgarh koriya minor rape 5yr old girl throw into well kill](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/chhattisgarh-koriya-minor-rape-5yr-old-girl-throw-into-well-kill.jpg)
சத்தீஸ்கர் மாநிலம் கோரியா மாவட்டத்தின் ஒரு பகுதியில் வயல்வெளியில் 5 வயது சிறுமி மற்றும் அவரது உறவினர் 6 வயது சிறுவன் விளையாடி கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் பூஜைக்காக, பூ பறிக்க உதவுமாறு கேட்டுள்ளார்.
ஏதும் அறியாத அந்த 2 பிஞ்சு குழந்தைகளும் சிறுவனின் பின்னே சென்றுள்ளனர். கொடூர புத்திக் கொண்ட அந்த 17 வயது சிறுவன், குழந்தைகளை 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று, 6 வயது சிறுவனை தனது சகோதரியின் கண்களுக்கு முன்பாக கழுத்தை நெரித்துக் கொன்று உடலை புதருக்குள் வீசியுள்ளார்.
மேலும் 5 வயது சிறுமியையும் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, அருகில் இருக்கும் பாழடைந்த கிணற்றில் வீசியுள்ளார். அதிர்ஷ்டவசமாக 5 வயது சிறுமி கிணற்றில் இருக்கும் நீரில் மிதந்த படியே உதவிக்கு கத்தி சத்தமிட்டுள்ளார்.
எதிர்பாராத விதமாக அவ்வழியே வந்த ஒருவர், சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, கிணற்றில் மிதந்து கொண்டிருந்த சிறுமியை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அப்பகுதி மக்களை அழைத்து வந்து, கிணற்றில் இருந்த சிறுமியை மீட்டு அருகிலிருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதித்து போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர். மேலும் சிறுமியின் உடல் முழுவதும் காயங்கள் மற்றும் கடித்த அடையாளங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டமாக சிறுமி அளித்த தகவல்களின் பெயரில், குற்றவாளியான 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அந்த சிறுவன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், 6 வயது சிறுவனை கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 17 வயது சிறுவன் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)