அசுர வேகத்தில் வந்த ‘7 வாகனங்கள்’.. ‘நொடியில்’ நடந்த கோர விபத்தில் 4 பேர் பலி..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Aug 07, 2019 05:56 PM

புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து வந்த 7 வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Accident 4 dead after 7 vehicle collision near Pudukkottai

புதுக்கோட்டை அருகில் உள்ள நார்த்தமலையில் அடுத்தடுத்து வந்த கார்கள், வேன்கள் என 7 வாகனங்கள் ஒரே நேரத்தில் மோதிக் கொண்டுள்ளன. இந்த கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்பி செல்வராஜ் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளார். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு விரைவாக அனுப்பும் பணியில் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.

Tags : #PUDUKKOTTAI #ROAD #ACCIDENT #7VEHICLE #COLLISION