'எங்க ஃபேமிலில யாருக்கும் பரவிடக் கூடாது, அதான்...' அவங்களோட சப்போர்ட் தான் ரொம்ப முக்கியம்...' கண்கலங்கிய மருத்துவர்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஎங்களது குடும்பத்திற்கு பரவி விட கூடாது என்பதற்காக நாங்கள் விடுதியில் தங்கியுள்ளோம் என கொரோனா வார்டில் பணியாற்றும் பெண் மருத்துவர் செய்தியாளர்களிடம் கூறும் போது கண்ணீர் விடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அனைவரது மனதையும் கனமாக்கியுள்ளது.
இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 4905 பாதிப்படைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் 386 பேர் சிகிச்சை பெற்று தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி 136 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் கட்டத்தில் இருப்பதற்கு காரணம் மருத்துவர்களும், மருத்துவ துறை சார்ந்தவர்களும், தூய்மை பணியாளர்களும், தன்னலமின்றி செயல்பட்டு வரும் காவல் துறையினர் மற்றும் இன்னும் பலர் ஆவர். தங்களுடைய குடும்பங்களைப் பற்றி கவலை இல்லாமல் இரவு பகல் பாராமல் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறாமல் உழைத்து வருகின்றனர்.
அதில் ஒருவர் தான் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றும் பெண் மருத்துவர் அம்பிகா. பெரும்பாலும் கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்களும், செவிலியர்களும் தங்கள் குடும்பத்தினருக்கு கொரோனா பரவி விடக் கூடாது என்பதற்காக மருத்துவமனை விடுதிகளில் தங்குக்கின்றனர்.
இதேபோல் டாக்டர் அம்பிகாவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை விடுதியில் தங்கி வருகிறார். இன்று மருத்துவர் அம்பிகாவிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர்.
அப்போது பேசிய அம்பிகா, தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் தங்களுக்கு மிக சவாலான காலகட்டமாக உள்ளது என தெரிவித்த அவர், எங்கள் குடும்பத்தாருக்கும் இவ்வைரஸ் பரவி விட கூடாது என்பதற்காக நாங்கள் இங்கே தங்கியுள்ளோம்.அதேபோல் மக்களும் தங்கள் வீடுகளிலேயே தங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
மேலும் தற்போது உடன் பணியும் நண்பர்கள், உயர் அதிகாரிகளின் அன்பும் ஆதரவும் இருந்தாலும், இந்த இக்கட்டான நேரத்தில் குடும்பத்தினரின் ஆதரவு தேவைப்படுகிறது எனக் கூறிக் கண் கலங்கி அழுதுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதை பார்க்கும் அனைவரும் டாக்டர் அம்பிகாவுடம் பக்கபலமாக இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.
#WATCH Dr Ambika, who is posted at #COVID19 treatment ward of Delhi AIIMS, breaks down while speaking about her professional challenges amid coronavirus pandemic. pic.twitter.com/erNNUIh7Il
— ANI (@ANI) April 6, 2020