"ஆத்தா... எனக்கு லீவு விட்டாச்சு..." "ஜெய் கொரோனா..." இந்த பீதியிலும் 'திருவண்ணாமலை ஜோதியை' பார்த்த மாதிரி.... அதிரவிட்ட 'ஐஐடி' மாணவர்கள்... என்னதான் 'லீவு' விட்டாலும் 'இப்படியா?'...
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பீதி காரணமாக டெல்லி ஐஐடி மாணவர்களுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டதற்கு 'ஜெய் கொரோனா' என முழக்கமிட்ட சம்பவம் காண்போரை முகம் சுழிக்க வைத்தது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா இந்தியாவிலும் தனது கணக்கை ஆரம்பித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 107 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் குணமடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பள்ளி-கல்லூரிகள், திரையரங்குகள், பொதுமக்கள் கூடும் மால்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல நகரங்கள் முடங்கிப் போயுள்ளது.
இந்நிலையில், வருகிற 31ஆம் தேதி வரை டெல்லி ஐஐடிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த மாணவர்கள், ஜெய் கொரோனா என முழக்கமிட்டனர். என்னதான் விடுமுறையாக இருந்தாலும் கொரோனாவை வாழ்த்தி கோஷமிட்டது காண்போரை முகம் சுழிக்க வைத்தது.
