'இந்த ஊர்ல எல்லாருக்குமே 2 பொண்டாட்டி தான்...' 'லாரி பிடிச்சாவது கெளம்பி போவோம்டா...' சமூக வலைத்தளங்களில் புலம்பும் 90'S கிட்ஸ்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் இரு மனைவிகளை திருமணம் செய்வதை கலாச்சாரமாகவே கொண்டு வாழ்ந்து வரும் கிராம மக்களின் வாழ்க்கை முறையை கண்டு பலர் வாயடைத்து போய் உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில், பார்மர் என்னும் மாவட்டம் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்திருக்கும் ஒரு இடம் ஆகும். அங்கு இருக்கும் தேரசர் என்ற கிராமத்தில் தான் ஒரு விவிசித்திர பழக்கம் காணப்படுகிறது. இந்த செய்தியை கேள்விப்பட்ட 90's கிட்ஸ் அனைவரும் லாரி பிடித்தாவது தேரசருக்கு புறப்பட்டு போகலாம் என சமூகவலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர்.
செய்தி என்னவென்றால் அந்த சிறிய கிராமத்தில் வசிக்கும் அத்தனை ஆண்களுக்கும் இரண்டு மனைவிகளாம். சுமார் 600 பேர் குடியிருக்கும் இந்த கிராமத்தில் இந்த வழக்கம் மத சடங்காக இல்லாமல் ஒரு கலாச்சார முறையாக பார்க்கப்படுகிறது. மேலும் அப்பகுதியில் வாழும் பிற மதத்தினரான இஸ்லாமியர்களும் இந்த பழக்கத்தை பின்பற்றுகின்றனராம்.
இதற்கு ஒரு காரணத்தையும் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். அதாவது அந்த கிராமத்தில் இருக்கும் ஆண்கள் திருமணம் செய்ய விரும்பினால் முதலில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, பிறகு கட்டாயம் இரண்டாவது மனைவியையும் திருமணம் செய்ய வேண்டுமாம். ஏனென்றால் முதலாவதாக திருமணம் செய்த மனைவிக்கு குழந்தையே பிறக்காது என கூறப்படுகிறது.
இதனால் குழந்தைக்கு ஆசைப்படும் ஆண்கள் இரண்டாவது பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் சூழல் உருவாகிறது என்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் யாரும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அவர் மூலமே குழந்தையை பெற்றுக்கொள்கின்றனர்.
அங்கு வசிக்கும் பல ஆண்கள் முதல் மனைவி வழியே குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்து முயற்சித்து தனது வாழ்நாளில் பாதி நாட்கள் வரை காத்துகிடந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அத்தகைய ஆண்கள், மீண்டும் திருமணம் செய்துகொண்டபோது, குழந்தைகளைப் பெறுகிறார்கள் என்றும் நம்பப்படுகிறது. இந்த ஒரு காரணத்திற்காகவே ஒரு இளைஞர் இரண்டு முறை திருமணம் செய்து கொள்கிறாராம்.
இதில் மற்ற இடங்களை விட அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் முதல் மனைவியும் இரண்டாவது மனைவியும் தங்களுக்குள் எந்தவித பொறாமை அல்லது பாதுகாப்பற்ற தன்மையால் சண்டையிடாமல் உள்ளனராம்.