‘80 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை’... ‘புரட்டி போடும் கொரோனாவுக்கு மத்தியில்’... ‘ஆசுவாசப்படுத்திய செய்தி’!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ள நிலையிலும், பல வாரங்களுக்குப் பின்னர் நேற்று உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கொரோனா வைரசின் மையப்புள்ளியான அமெரிக்காவில், பலி எண்ணிக்கை நாள்தோறும் ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரம் பேர் வரை நீடித்து வந்தது. இதனால் அந்த மக்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரும் அச்சமடைந்தனர். இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி அங்கு உயிரிழந்தனவர்களின் எண்ணிக்கை 800-க்கும் குறைவாகவே பதிவானது. சுமார் பல வாரங்களுக்குப் பின்னர் குறைந்து காணப்பட்டது.
மேலும் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 20 ஆயிரத்துக்கும் குறைவாகவே காணப்பட்டது. இதன்காரணமாக அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 66 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இவர்களுடன் 16 ஆயிரத்து 500 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.