'லேடிஸ் ஹாஸ்டலுக்குள்'... 'கட்டிலுக்கு அடியில்'... 'ஒரு நாள்' முழுவதும் பதுங்கியிருந்த 'மாணவன்'... 'கையும் களவுமாக' பிடித்த 'காவலர்கள்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரபல அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவியர் அறையில் கட்டிலுக்கு அடியில் ஒருநாள் முழுவதும் பதுங்கியிருந்த மாணவரை, கல்லூரி பாதுகாவலர்கள் கையும் களவுமாக பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் புகழ்பெற்ற அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஆறாயிரம் மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள மாணவியர் விடுதியில் குறிப்பிட்ட மாணவியின் அறைக்கு ஒரு மாணவன் அடிக்கடி வந்து செல்வதை மாணவியின் தோழியர் கவனித்துள்ளனர்.
பலமுறை எச்சரித்தும் மாணவன் கேட்காததால் அவரை கையும் களவுமாக பிடிக்க திட்டம் தீட்டினர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மாணவியின் அறைக்கு, அந்த மாணவன் சென்றுள்ளார். அதை வெளியிலிருந்து பார்த்த மாணவியர் விடுதியின் அறைக்கதவை பூட்டு போட்டு பூட்டி விட்டனர். பின்னர் விடுதி வார்டன் மற்றும் பாதுகாவலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து பாதுகாவலர்கள் வந்து கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். ஆனால் அங்கு மாணவியை தவிர யாரும் இல்லை. இருப்பினும் அனைத்து கட்டில்களையும் தூக்கி பார்த்தபோது, ஒரு கட்டிலுக்கு அடியில் மாணவர் ஒளிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெளியில் வந்த அவரிடம் பாதுகாவலர்கள் விசாரணை நடத்தினர். பின்னர் மாணவன், மாணவி இருவரின் பெற்றோருக்கும் தகவல் அளித்தனர்.
