'அடேங்கப்பா... பேப்பர்ல இருந்து கரண்ட் எடுக்கமுடியுமா?!'... 'வியப்பூட்டும் கண்டுபிடிப்பால் அசர வைத்த இளம்பெண்'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Feb 04, 2020 12:01 PM

காகிதத்தில் இருந்து மின்சாரம் தயாரித்து, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் ஒரு இளம் பெண்.

brazil student finds a method to generate electricity

பிரேசில் நாட்டைச் சேர்ந்த கெல்லி மொரேரா என்ற 22 வயது நிரம்பிய கல்லூரி மாணவி, நீராவி வடிவில் காற்றில் இருக்கும் நீர் மூலக்கூறுகளை வைத்து ஆற்றலை உருவாக்கியுள்ளார். பிறகு, அதனைப் பிடித்து கிராபைட் பூசப்பட்ட காகிதத்தில் செலுத்தி மின்சாரத்தை தயாரித்துள்ளார். இப்படி தயாரிக்கப்பட்ட மின்சாரத்தின் மூலம் 60 எல்.இ.டி. பல்புகளையும் ஒளிர வைத்துள்ளார்.

இந்த திட்டம் தொடக்க நிலையில் இருந்தாலும், எதிர்காலத்தில் இந்த திட்டத்தின் மூலம் வீடுகளுக்கும் மின்சாரம் தயாரித்து வழங்கமுடியும் என மொரேரா தெரிவித்துள்ளார். குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்கப்படும் இந்த செயல்முறை, சர்வதேச அளவில் ஏழைமக்களுக்கு பயன்படும் விதமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags : #BRAZIL #STUDENT #SCIENCE