VIDEO: 'கெட்ட வார்த்தை' பேசுறத எப்போ தான் விடுவாரோ?... கேப்டனுக்கு 'எதிராக' பொங்கும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 2-ம் நாள் ஆட்ட முடிவில் 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் எடுத்துள்ளது.
தற்போது இந்திய அணியை விட நியூசிலாந்து அணி 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை அதிகாலை 4 மணிக்கு 3-ம் ஆட்டம் நடைபெறும். கைவசம் 5 விக்கெட்டுகளும் இருப்பதால் மேலும் ரன்கள் குவித்து இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான ராஸ் டெய்லர்(44) இன்று ஆட்டமிழந்து செல்லும்போது கோலி அவரைப்பார்த்து, மோசமாக சைகை செய்தது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. போட்டிக்கு முன் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் டெய்லர் 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை கோலி புகழ்ந்து பேசியிருந்தார்.
<iframe src='https://t.co/91WWcbjLE3' frameborder='0' scrolling='no' allowfullscreen width='640' height='395'></iframe>
— Rohit Sharma Fan Club (@DeepPhuyal) February 22, 2020
ஆனால் போட்டியின்போது டெய்லர் அவுட்டாகி செல்கையில் தேவையில்லாத சைகை செய்தும், கெட்ட வார்த்தை பேசியும் அவரை வெறுப்பேற்றினார். டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என அனைத்து விதமான போட்டிகளிலும் 100 போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமை ராஸ் டெய்லருக்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில் தான் கோலி இப்படி ஒரு காரியத்தை செய்து ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.
@benstokes38 . This time it's again you. 😂
. #NZvsIND #ViratKohli #BenStrokes#ICC @ICC #BCCI @BCCI #Ashwin #Shami #Pant #Rahane #Bumrah #Pujara pic.twitter.com/bemgtF4L0e
— Manav Chawla (@ManavChawla21) February 22, 2020
இதேபோல 12-வது ஓவரின் முதல் பந்தை ஷமி வீசும்போதும் பென் ஸ்டோக்ஸ் பெயர் போலவே வரும் கெட்ட வார்த்தையை கோலி சொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் கெட்ட வார்த்தைகள் பேசுவதை இவர் எப்போது விடப்போகிறார்? என்று தெரியவில்லை என விமர்சனம் செய்து வருகின்றனர்.