'இருய்யா'... 'ரெஸ்ட்' எடுத்துக்கிட்டு 'இருக்கேன்ல...' 'சும்மா சும்மா' ஹாரன் அடிச்சுக்கிட்டு... சாலையில் 'ஒய்யாரமாக' ஓய்வெடுத்த 'சிறுத்தை...'
முகப்பு > செய்திகள் > இந்தியாசமீப நாட்களாக வனவிலங்குகள் மக்கள் வாழும் பகுதியில் அதிகளவில் ஊடுருவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது

சமீபத்தில் ஆந்திராவில் சாலையின் நடுவே படுத்து ஒய்யாரமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சிறுத்தையின் வருகையால் அந்தப் பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் முடங்கியது.
ஆந்திர மாநிலம், கர்நூல் மாவட்டம், ஆல்லகட்டா மண்டலம் அஹோபிலம் பகுதியில் பழமை வாய்ந்த நரசிம்ம சாமி கோயில் உள்ளது. மிகவும் பிரசித்திப் பெற்ற இந்த கோயிலுக்கு பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம்.
வனப்பகுதியில் உள்ள இந்த சாலை வழியாக பக்தர்கள் தங்கள் வாகனங்களில் சென்று வருவார்கள். இந்நிலையில் அகோபிலம் அருகே உள்ள துர்க்கை அம்மன் கோயில் அருகில் தெலுங்கு கங்கை கால்வாய் அருகில் உள்ள சாலையில் நேற்று இரவு பலர் வாகனங்களில் சென்று கொண்டிருந்த போது, சிறுத்தை ஒன்று சாலையின் நடுவே படுத்து ஒய்யாரமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்து அவ்வழியாகச் சென்ற சிலர் செல்போனில் வீடியோ எடுத்தனர். சிறுத்தை இருப்பதால் அச்சத்தில் 50 அடி தொலைவில் வாகனங்கள் நின்றுவிட்டன. சற்று நேரம் கழித்து சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. அதன்பின் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை இயக்கி புறப்பட்டுச் சென்றனர்.
சிலர் இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து வனத்துறையினர் சிறுத்தை நடமாடத்தை கண்காணிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

மற்ற செய்திகள்
