'சவக்குழிக்கு ரிசர்வேஷன் போயிட்டு இருக்கு...' 'இடம் கிடைக்கிறது பயங்கர ரிஸ்க்காம்...' 10 வருஷம் முன்னாடியே சவக்குழி புக் பண்ணினவங்களும் உண்டு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் இறந்த உடல்களை புதைப்பதற்கு முன்பதிவு செய்யும் வழக்கம் அதிகரித்துள்ளதாகவும், உடல்களை நல்லடக்கம் செய்யத் தேவையான இடம் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதற்கு முன் தங்கள் குடும்ப உறுப்பினர்களை நல்லடக்கம் செய்த இடத்தை மீண்டும் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
முஸ்லிம் மக்களின் உடலை நல்லடக்கம் செய்யும் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் புகழ்பெற்ற மெஹ்ன்டியன் மயானத்தில் அதிவேகமாக முன்பதிவு நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. மேலும் மத்திய தில்லியில் லோக் நாயக் மருத்துவமனைக்குப் பின்புறம் அமைந்துள்ள இம்மயானத்தில் ஒரு சவக்குழிக்கு ரூ.50ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது, இந்த மயானத்தில் தான் புகழ்பெற்ற முஸ்லிம் மதத் தலைவர் ஷா வலியுல்லாவின் உடல் அவரது தந்தையின் உடலுக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே ஒரு சிலர் தங்களின் பெருமைக்காகவும் , குடும்ப பரம்பரியத்திற்காகவும் கட்டணம் செலுத்தி இடத்தினை பெறுகின்றனர்.
இதுவரை கொரோனா நோயாளியால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் மெஹ்ன்டியன் மயானத்தில் புதைக்க அனுமதிக்கவில்லை. கொரோனா வைரசால் பாதிக்கப்படாதவர்களின் உடல்களை புதைக்க மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது என்று மெஹ்ன்டியன் மயானத்தில் பணிபுரியும் முஸ்தாக் கூறியுள்ளார்.
இந்த முன்கட்டண பதிவானது பல ஆண்டுகளாக நடைபெற்று வருவாதாகவும், ஒரு சிலர் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே கூட சவக்குழிகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளுவதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட இடத்துக்குள் நல்லடக்கம் செய்ய 1,00,000 வரை கட்டணம், அங்கிருந்து சற்று தொலைவில் இருக்கும் இடங்களுக்கு ரூ.30 ஆயிரம் என இந்த மயானத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு
கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் கூறினார் முஸ்தாக்.