"2வது வீட்டுக்காரன் ஓடிட்டான்.. வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் 20 ஆயிரம்.. படிக்கலனா பரவால்ல.. எக்ஸாம்க்கு வந்து கொரோனா வந்தா?".. கதறும் பெண்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனது மகளுடன் பள்ளிக்கு வந்த அம்மா ஒருவர், “தேர்வு எழுதாவிட்டாலும் பரவால்ல, வேலை செய்து பிழைத்துக்கொள்ளுவோம். கொரோனாவால் உயிர் போனால் என்ன செய்றது” என்று பேசிய வீடியோ பரவி வருகிறது.
அதில், “வண்டி இல்லாததால், குரோம் பேட்டையில் உள்ள ஒருவர் வீட்டில் தங்கிக் கொண்டு எக்ஸாம்க்காக மட்டுமே வருகிறோம். 10வது படிக்கும் குழந்தைகளுக்கு தேர்வு வைக்குறதே வேஸ்ட். எல்லாருக்கும் கொரோனா வருவதால் பயமா இருக்கு. சாப்பாட்டுக்கே வழி இல்லை.
பலர் கொடுக்கும் கொரோனா நிவாரண நிதி பேக்கேஜ்களை வைத்துக்கொண்டு 1 வாரம் மட்டுமே ஓட்ட முடிகிறது. அதுக்கு அப்புறம் பிச்சையா எடுப்பது? வேலையும் இல்லை. வீட்டு வாடகையும் பிரச்சனையாக இருக்கிறது. 20 ஆயிரம் அட்வான்ஸ், 6 ஆயிரம் வாடகை. என் வீட்டுக்காரர் இறந்ததால், இன்னொருவரை கட்டிவைத்தார்கள். அவரும் விட்டுவிட்டு ஓடிவிட்டார். 3 குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் சிரமப்படுறேன்.
இந்த சூழ்நிலையில் குழந்தைங்க எப்படி படிப்பாங்க? படிக்கலனா கூட வீட்டு வேலை செய்து பிழைக்கலாம். ஆனால் வீட்டு வேலைக்கும்
பத்தாம் வகுப்பு தேர்வு எழுத போகும் ஒரு மாணவி தாயாரின் கண்ணீர்.
தேர்வு எழதாவிட்டாலும் வேலை செய்து பிழைத்து கொள்ளுவோம்..கொரானோ வால் உயிர் போனால் என்ன
செய்வது.. pic.twitter.com/A4m7gtB1nI
— சாணக்கியன் (@thechanakkiyan) June 8, 2020
சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். தேர்வுக்கு சென்று கொரோனா வந்துட்டா என்ன செய்றது?” என்று வேதனையுடன் கூறுகிறார்.