"நெலமை ரொம்ப மோசமாயிட்டு இருக்கு!".. திரும்பவும் அடுத்த குண்டை தூக்கிப் போட்ட உலக சுகாதார நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக அளவில் கொரோனா வைரசுக்கு 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 03 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகிமுள்ளனர்.
![covid19 status becoming very worst among the world, says WHO covid19 status becoming very worst among the world, says WHO](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/photo-covid19-status-becoming-very-worst-among-the-world-says-who.jpg)
இதுபற்றி ஜெனீவாவில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ,“கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய நிலை, உலகம் முழுவதும் வெகுவாக மோசமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா தொற்றுநோய்களின் தினசரி எண்ணிக்கை அதிகமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே இன நீதிக்கான ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவிலும் அதற்கு அப்பாலும் தீவிரமாக பரவி வருகிறது. ஆனால் ஆர்ப்பாட்டம் செய்யும் பொதுமக்கள் அனைவரும் கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
சீனாவில் தொடங்கிய இந்த நோய்த்தொற்று கிழக்கு ஆசியாவிற்குப் பிறகு, ஐரோப்பபா தற்போது இந்த நோயின் மையமாகவே மாறியுள்ளது. ஆனால் இப்போது அமெரிக்கா இதனை மிகவும் முந்தியுள்ளது. ஐரோப்பாவில் நிலைமை மேம்பட்டு வருகின்ற போதிலும், உலகளவில் கொரோனா தொற்றுநிலை மோசமடைந்து வருகிறது.
கடந்த 10 நாட்களில், ஒன்பது நாட்களில் மட்டும் 1 லட்சத்துக்கும் க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் நேற்று, 1 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை பாதிப்புகளில் கிட்டத்தட்ட 75 சதவீதம் 10 நாடுகளிலிருந்து வந்தவை பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் தெற்காசியாவில் இருந்துதான்” என்று தெரிவித்துள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)