'ப்ளீஸ்...! உங்க போட்டோவ வாட்ஸப் பண்ணுங்க...' 'போலிஸ்ன்னு உதவி பண்ண போய்...' - பெண் தொழிலதிபருக்கு நடந்த உபத்திரவம் ...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jul 13, 2020 01:43 PM

தெலுங்கானா மாநிலத்தில் பெண் தொழிலதிபருக்கு போனில் அடிக்கடி புகைப்படம் அனுப்பி தொல்லை செய்ததாக தெலுங்கானா மாநில சிறப்பு காவல்துறை (டி.எஸ்.எஸ்.பி) கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Telangana Police harassing a women sending photos on whatsapp

பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரியும் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பி.வீராபாபு(32) என்பவர் யூசுப்குடா பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 7ஆம் தேதி வீரபாபு பணிபுரியும் காவல் நிலையத்தில் இறக்குவிடுமாறு அப்பகுதி வழியே வந்த காரில் லிப்ட் கேட்டுள்ளார்.

பி.வீராபாபு ஒரு போலீஸ்காரர் என்பதால் காரில் இருந்த பெண்மணி அவருக்கு ஒரு லிப்ட் கொடுத்துள்ளார். மேலும் காரில் செல்லும் போது இருவரும் தங்களின் தொடர்பு எண்களை மாற்றி கொண்டுள்ளனர். பெண் தொழிலதிபரிடம் எதிர்காலத்தில் எந்தவொரு உதவிக்கும் அவரை அழைக்கலாம் என்று வீரபாபு கூறியுள்ளார்.

இதன் பிறகு தான் அந்த பெண் தொழிலதிபருக்கு தலைவலி தொடங்கியுள்ளது. காவலர் வீரபாபு பெண் தொழிலதிபருக்கு நேரம் காலம் பார்க்காமல் வீடியோ கால் பண்ணத்தொடங்கியுள்ளார். மேலும் வாட்ஸ்அப்பில், குறுஞ்செய்திகளையும் படங்களையும் அனுப்பியுள்ளார்.

இதனை விரும்பாத பெண் தொழிலதிபர் இம்மாதிரியான செயல்களை நிறுத்துமாறு பலமுறை கேட்டுக்கொண்டார், ஆனால் வீரபாபு அவரின் பேச்சைக் கேட்காமல் தன்னுடைய செய்கையை தொடர்ந்துள்ளார். மேலும் பெண் தொழிலதிபருடைய புகைப்படங்களையும் கேட்டு தொல்லை செய்துள்ளார்

இதனால் கோபமடைந்த அந்த பெண்மணி போலீஸில்  புகார் அளிக்க முடிவு செய்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை விசாரித்த ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அஞ்சனி குமார் காவலரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார், மேலும் பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் அவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

இதுகுறித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹைதராபாத் ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அஞ்சனி குமார் ஐ.பி.எஸ், 'சட்டத்திற்கு மேல் யாரும் இங்கு பெரிது இல்லை. 12 பட்டாலியன் டி.எஸ்.எஸ்.பி.யின் கான்ஸ்டபிள் வீரபாபு ஒரு பெண்ணுடன் தவறாக நடந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். சீருடையில் இருக்கும் இத்தகைய குற்றவாளிகளால் நாங்கள் வெட்கி தலைகுனிகின்றோம். எந்தவொரு குற்றச்செயலையும் எந்தவொரு நபரிடமிருந்து பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. காவலரால் ஏதேனும் தவறான நடத்தை ஏற்பட்டால் 9490616555 என்ற எண்ணில் வாட்ஸ்அப்பில் தகவல்  தெரிவிக்கவும்' என பதிவிட்டுள்ளார்.

Tags : #POLICE #PHOTO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Telangana Police harassing a women sending photos on whatsapp | India News.