அடிச்ச 'குளிருக்கு' இதெல்லாம் ஒரு விஷயமா?... கரைபுரண்டோடிய மது... டிசம்பரில் மட்டும் '1000 கோடி'க்கு விற்பனை!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Jan 03, 2020 02:12 PM
கடந்த 118 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாட்டிவதைத்த குளிரால், டெல்லியில் மது விற்பனை கரைபுரண்டோடி இருக்கிறது.

கடந்த 2018-ம் ஆண்டு அங்கு மது விற்பனை சுமார் 460 கோடியாகவும், 2019-ம் ஆண்டு டிசம்பரில் 465 கோடி ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களில் டிசம்பர் ,மாதம் மட்டும் நடந்த விற்பனையால் சுமார் 1000 கோடி ரூபாயை அரசு வருவாயாக ஈட்டியுள்ளதாக கலால்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கடந்த நவம்பர் மாதத்தில் சுமார் 120 பார்களை டெல்லி அரசு தடை செய்தது. எனினும் விற்பனை சற்றும் குறையவில்லை என்று அதிகாரிகள் வியப்பு தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு மது பாட்டில்களின் விலையை சுமார் 20-25% குறைத்ததும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது டிசம்பர் 30, 31 ஆகிய தேதிகளில் மட்டும் தமிழக அரசு டாஸ்மாக் மூலம் ரூ.242 கோடி வருவாய் ஈட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
