‘என் முன்னாடியே கால்மேல கால்போட்டு பாட்டு கேக்குறியா’.. போதை நபரால் இளைஞருக்கு நேர்ந்த கொடுமை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 09, 2019 04:04 PM

கால்மேல் கால்போட்டு பாட்டுகேட்டதற்காக இளைஞரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Drunken man attacked youth with knife in Theni

தேனி மாவட்டம் கோடாங்கிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் (23). இவர் தனது வீட்டின் முன் அமர்ந்து பாட்டுக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியே கண்ணன் என்பவர் வந்துள்ளார். மதுபோதையில் இருந்த கண்ணன் சுந்தரிடம்  ‘என் முன்னடி எப்படி கால்மேல் கால்போட்டு பாட்டு கேட்கலாம்’ என கூறி தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவதாம் ஏற்பட்டுள்ளது.

அப்போது கண்ணன் தன்னிடம் இருந்த அரிவாளால் சுந்தரத்தின் தலையில் வெட்டியுள்ளார். இதில் நிலைகுலைந்து விழுந்த சுந்தரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். கால்மேல் கால்போட்டு பாட்டுக்கேட்டதால் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Photo credits: Vikatan

Tags : #ATTACKED #THENI #DRUNKENMAN #ALCOHOL