ஒரு காலுக்கு '52 பைசா' நஷ்டம்.. ஏர்டெல், வோடபோன்-க்கு 'அபராதம்' போடுங்க.. 'கதறும்' ஜியோ!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Manjula | Oct 18, 2019 02:22 PM
இனிமேல் இலவச குரல் அழைப்புகள் கிடையாது என ஜியோ அறிவித்ததை தொடர்ந்து, வாய்ஸ் கால்கள் முற்றிலும் இலவசம் என ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் அறிவித்தன.இதைத்தொடர்ந்து மாறிமாறி இந்த நிறுவனங்கள் அனைத்தும் ட்விட்டரில் சண்டை போட்டு வருகின்றன. இதனால் ட்விட்டரே அமளிதுமளியாகி கிடக்கிறது.
இதுபோதாதென்று ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு அபராதம் போட வேண்டும் என டிராய்க்கு(TRAI) ஜியோ கடிதம் எழுதியுள்ளது. அதில், '' ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் நிறுவனங்கள் கஸ்டமர் கேர்களின் லேண்ட்லைன் எண்களாக மொபைல் எண்களை வழங்கி மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன.
ஜியோவில் இருந்து லேண்ட்லைனுக்கு கால் செய்தால் நிமிடத்துக்கு 58 காசுகளும், மொபைல் எண்ணிற்கு கால் செய்தால் நிமிடத்துக்கு 6 காசுகளும் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் செய்யும் மோசடியால் ஜியோ நிறுவனத்துக்கு நிமிடத்துக்கு 52 காசுகள் இழப்பு ஏற்படுகிறது.
லேண்ட்லைன் மற்றும் மொபைலுக்கு உள்ள தன்மையை மாற்றுவது சட்டத்திற்கு புறம்பானது. இதனால் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கும். எனவே முறைகேட்டில் ஈடுபட்டுள்ள ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்,'' என கோரிக்கை விடுத்துள்ளது.