'பைக்கை சேஸிங் செய்த 'புலி'... 'நூலிழையில் 'எஸ்கேப்' ஆன இளைஞர்கள்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Jul 01, 2019 08:59 AM
வயநாடு வனப்பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த பைக்கை, புலி ஒன்று துரத்திய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முத்தங்க வனவிலங்கு சரணாலயம் மிகவும் புகழ் பெற்றதாகும். நெடுந்தூரம் பைக்கில் பயணம் செய்யும் இளைஞர்கள் இந்த வனப்பகுதியில் உள்ள சாலை வழியாக செல்வது வழக்கம். அவ்வாறு பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர்களை நோக்கி புலி ஒன்று துரத்தி வந்ததை பார்த்த அந்த இளைஞர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். உடனே அந்த இளைஞர்கள் வேகமாக பைக்கை செலுத்த, அவர்களை துரத்தி கொண்டு வந்த புலி சாலையை கடந்து மற்றொரு புறம் உள்ள புதருக்குள் சென்றுவிட்டது.
புலி தங்களை நோக்கி பாய்ந்து வந்ததை பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Tiger chasing a bike in #wayanad Kerala. Lucky escape
@AnimalPlanet @NatGeo pic.twitter.com/7fPLUHvNKc
— Saju Mohan (@itsmeeSaju) June 30, 2019
