'இப்போ நல்லா இருக்காங்க'...'பெரும் துயரத்தில் இருந்து மீண்ட பெண்'...'பலரையும் பதறவைத்த வீடியோ'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Jul 19, 2019 01:48 PM
சாலையை கடந்த போது அதிவேகமாக வந்த கார் மோதி பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் பெண் ஒருவர் சாலையை கடக்க முயற்சிக்கிறார். அப்போது பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்ததால் அதற்கு முன்னால் வந்து சாலையை கடக்க முயற்சிக்கிறார். அப்போது சாலையின் இருபுறமும் சரியாக கவனிக்காமல் அந்த பெண் சாலையை கடக்க வேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்று அந்த பெண் மீது மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் அந்த பெண் தூக்கி வீசப்படுகிறார். இதனை சாலையின் மறுபுறம் இருந்த நபர் ஒருவர் வீடியோ எடுக்க அது தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதனிடையே விபத்தில் சிக்கிய அந்த பெண் தற்போது நலமாக இருப்பதாகவும், சாலையை கடக்கும் போது எந்நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அந்த பெண்ணின் நண்பர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சினிமாவை மிஞ்சும் இந்த வீடியோ காட்சிகள் காண்போரை பதைபதைக்க செய்துள்ளது.