எங்க இருக்கீங்க?.. வாங்கிய 'கடனை' திருப்பி கொடுக்க.. '2 வருடங்களாக' நண்பரைத் தேடும் இளைஞர்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Oct 15, 2019 10:12 PM

மிகவும் நெருங்கிய உறவினர்களிடம் கடன் வாங்காதீர்கள் என்று கூறுவார்கள். கடன் அன்பை முறிக்கும் என்னும் பழமொழியே உண்டு. ஆனால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க நண்பர் ஒருவரை, இளைஞர் தேடும் சம்பவம் நிஜத்தில் நடந்துள்ளது.

Pakistan man hunts for UAE citizen to repay balance loan

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அஸதுல்லா அஹமத்ஜான் இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு துபாய் நாட்டை சேர்ந்த நுமன் என்பவர் பழக்கமானார். அடிக்கடி நுமன் இவரது கடைக்கு வருவதால் இருவருக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டு உள்ளது.

இந்தநிலையில் திடீரென அஸதுல்லாவின் வியாபாரம் நஷ்டமடைய தவிர்க்க முடியாத சூழலில் நுமனிடம் உதவி கேட்டுள்ளார். நுமனும் தனது மனைவி மூலமாக இவருக்கு 1 லட்சத்து 95 ஆயிரம் பணம் கொடுத்து உதவியுள்ளார். சிறிது காலம் கழித்து வாங்கிய கடனை அஸதுல்லா சிறிது,சிறிதாக திருப்பி கொடுத்துள்ளார். 40 ஆயிரம் மட்டுமே நுமனுக்கு கொடுக்க வேண்டும் என்னும் நிலை வந்தபோது நுமன் தனது மொபைல் நம்பரை மாற்றி விட்டார்.

எப்படியும் கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என நுமனைத் தேடிய அஸதுல்லா-வுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நுமன் அட்ரஸ், மொபைல் நம்பர் அனைத்தையும் மாற்றி விட்டார். எனினும் மனம் தளராத அஸதுல்லா துபாயில் இருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றில் இதுகுறித்து விளம்பரம் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த அனைவரும் இந்த காலத்தில் இப்படியொரு நபரா? என ஆச்சரியப்பட்டுள்ளனர். 

Tags : #PAKISTAN