‘ஒரே ஒரு பாய்ண்ட்ல மிஸ் பண்ணிடீங்களே கோலி’.. வெளியான டெஸ்ட் தரவரிசை பட்டியல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Oct 15, 2019 01:59 PM

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்திடம் விராட் கோலி பின் தங்கியுள்ளார்.

Virat Kohli just one point behind Steve Smith in Test rankings

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரட்டை சதமடித்து அசத்தினார்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. பேட்டிங் தரவரிசை பட்டியலில் 937 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் 936 புள்ளிகளுடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளார். ஒரு புள்ளி வித்தியாசத்தில் முதல் இடத்தை விராட் கோலி தவறவிட்டார். மேலும் 878 புள்ளிகளுடன் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 3 வது இடத்தில் உள்ளார்

Tags : #VIRATKOHLI #BCCI #ICC #TEST