'ஒரு செகண்டில் நடக்க இருந்த பயங்கரம்'...'சூப்பர் மேனாக வந்த பூனை'...பிரமிக்க வைத்த சிசிடிவி காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Nov 11, 2019 09:42 AM

தனது எஜமானரின் குழந்தை ஆபத்தில் இருப்பதை உணர்ந்து பூனை குழந்தையை காப்பாற்றிய வீடியோ காட்சிகள் காண்போரை பிரமிக்க செய்துள்ளது.

Cat saves 1 year old baby from falling down stairs watch viral video

வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள் எப்போதுமே மனிதர்களிடம் அளவற்ற அன்பை பொழிந்து வருகிறது. தன்னை வளர்த்து உணவளிப்பவர்களுக்கு காட்டும் அன்பும், அவர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் அவர்களை காப்பாற்ற அவை எடுக்கும் முயற்சிகள் எப்போதுமே நெகிழ செய்பவை. அதுபோன்று பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. சில பிராணிகள் எஜமானர்களை காப்பாற்ற உயிரை பறிகொடுத்த நிகழ்வுகளும் உண்டு.

அந்த வகையில் கொலம்பியாவில், பூனைக் குட்டி ஒன்று தனது எஜமானாருடைய குழந்தையின் உயிரை காப்பாற்றியிருப்பது காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. போகோடா மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் குழந்தை அங்கும் இங்குமாக தவழ்ந்து விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த குழந்தை தவழ்ந்து மாடி படிக்கட்டு அருகே சென்றது.

இதை கவனித்த பூனைக்குட்டி, தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து பாய்ந்து வந்து குழந்தையை தடுத்து நிறுத்தியது. மேலும் படிக்கட்டின் பக்கம் செல்லாதவாறு குழந்தையை பிடித்து தள்ளியது. இதனால் குழந்தைக்கு ஏற்பட இருந்த பெரிய விபரீதம் தடுக்கப்பட்டது.

இந்த காட்சிகள் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகளை அந்த வீட்டின் உரிமையாளர் சமூகவலைத்தளங்களில் பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது

Tags : #FACEBOOK #TWITTER #CAT #CRAWLING BABY #STAIRS #FALLING DOWN STAIRS