'ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை...' ' குழந்தையோடு இருந்த அம்மாவ...' 'பஸ்ல நெறைய பேர் இருந்தும் நடந்தேறிய...' நெஞ்சை உலுக்கும் கொடூரம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓடும் பேருந்தில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் மீண்டும் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் இருந்து மதுராவிற்கு செல்ல தன் குழந்தையை பெண் ஒருவர் பேருந்து பயணம் மேற்கொண்டார். படுக்கை வசதியுடன் இருக்கும் அப்பேருந்தில் பயணித்த ஒரு பெண்ணை அப்பேருந்து ஓட்டுநர் இருவரும் பாலியல் சீண்டல் செய்துள்ளனர். இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட பேருந்தில் பனிரெண்டிற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர்.
இரண்டு ஓட்டுனர்களின் ஒருவர் இரவு நேரத்தில் பேருந்து லக்னோ, மதுரா சாலையில் செல்லும் போது அப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துள்ளார். ஓடும் பேருந்தில், சக பயணிகள் இருக்கும் போதே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர் மேல் அப்பெண் கவுத்தம புத்தா நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து கூறிய கவுத்தம புத்தா நகர் போலீஸ் அதிகாரி, 'பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பெயரில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். மேலும் பேருந்தை பறிமுதல் செய்து, மற்றொரு ஓட்டுநரை நடந்த சம்பவம் தொடர்பாக கைது செய்துள்ளோம். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். தற்போது பேருந்தில் வந்த பயணிகள் அனைவரையும் விசாரித்து வருகிறோம்' எனக் கூறினார்.
பொதுமக்கள் பயணிக்கும் பேருந்தில், சக பயணிகள் நடுவில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது மேலும் பெண்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

மற்ற செய்திகள்
