"மொத பஸ்ஸ புடிச்சு ஊருக்கு போயிடனும்னு..." "நெனைச்சவங்களுக்கெல்லாம் தயாராகும் ஆப்பு..." 'இனி' பக்கத்து 'சீட்டுக்கும்' சேத்து 'டிக்கெட்' எடுக்கனும்...
முகப்பு > செய்திகள் > இந்தியாஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பஸ் போக்குவரத்து துவங்க அரசு முடிவு செய்துள்ள நிலையில், இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு மூன்றாவது கட்ட ஊரடங்கை வரும் 17 ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் 50 நாட்களுக்கு பின்னர் கர்நாடகா,ஒடிசா மாநிலங்களில் பஸ் போக்குவரத்தை துவங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பஸ் போக்குவரத்தைத் துவங்க அனுமதி அளித்துள்ளார்.
இதனையடுத்து பச்சை மண்டலங்களில் பஸ் போக்குவரத்து துவங்கப்பட உள்ளது. அதே நேரத்தில் பயணிகளின் கட்டணம் இருமடங்காக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியுடன் பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். முதற்கட்டமாக புவனேஸ்வரில் இருந்து கட்டாக்கிற்கு பஸ் இயக்கப்படுகிறது.
இதேபோல் கர்நாடகாவிலும் பஸ் போக்குவத்து தொடங்கப்பட உள்ளது. இம்மாநிலத்தின் உடுப்பி மாவட்டம் பச்சை மண்டலமாக மாறி உள்ளது. இதனையடுத்து மாநிலத்தின் குண்டாபூர்,ஹெப்ரி மற்றும் கார்கலா, ஹெஜாமடி,உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்தை துவங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. பேருந்தில் பயணிக்கும் பயணிகள் கண்டிப்பாக முககவசம் அணியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.