'கொரோனா தொற்று இல்லாதப் பேருந்து'... 'முதன்முறையாக தொடங்கிய மாநிலம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Apr 09, 2020 06:13 PM

கேரளாவில் கொரோனா தொற்று இல்லாமல், பாதுகாப்புடன் கூடிய பேருந்து திருவனந்தபுரத்தில் முதன்முறையாக இயக்கப்பட்டது.

Disinfectant bus in trivandrum amid coronavirus 19 outbreak

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்பின்படி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் கொரோனா தொற்று இல்லாமல் கிருமிநாசினி கொண்டு பாதுகாப்புடன் கூடியப் பேருந்தை முதன்முறையாக கேரள காவல்துறை டிஜிபி லோக்நாத் பெஹரா திருவனந்தபுரத்தில் தொடங்கி வைத்தார். இந்தப் பேருந்து காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு துணையாக இருப்பவர்கள் பயணம் செய்ய ஏதுவாக இருக்கும் என பெஹரா கூறியுள்ளார். தொடர்ந்து கேரளாவின் மற்றப் பகுதிகளிலும் இதேபோன்ற பேருந்து இயக்கப்படும் என அவர் தெரிவித்தார்.