கடைக்கு சென்ற பெண்ணை காணவில்லை... பாலத்திற்கு கீழே நிகழ்ந்த கொடூரம்... பாதி எரிந்த நிலையில சடலமாக மீட்பு..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Jan 08, 2020 10:13 AM

மேற்குவங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் காணாமல் போன 17 வயது சிறுமி பாதி எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

17-year-old girl was found burnt to death in westbengal

தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்துக்குட்பட்ட சஃபாநகர் பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் அடியில் நாய்கள் ஏதோ ஒரு பொருளுக்காக சண்டை போட்டக் கொடிருந்ததைக் கண்ட பொதுமக்கள் சிலர் அருகில் சென்று பார்த்துள்ளனர். அங்கு இளம்பெண்ணின் சடலம் ஒன்று பாதி எரிந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரத்த அடையாளங்கள் மற்றும் ஒரு சில பொருட்களை அப்பகுதியிலிருந்து கைப்பற்றிய போலீசார், ஆதாரங்களை சேகரித்த  விசாரணையில் இறங்கியுள்ளனர் உடலில் இருந்த ஆழமான காயங்களை வைத்து பார்க்கும்போது இரவே இந்த பெண் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் கொல்லப்பட்டாரா? என்பது குறித்து உடற்கூறாய்வு முடிவுக்குப் பிறகே தெரியவரும் என குறிப்பிட்டனர்.

சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் பேசுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டுக்கு அருகே உள்ள கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற அவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை என கண்ணீர் மல்க கூறினார். இந்தப் பகுதியில் போலீஸார் ரோந்து வருவதில்லை என்பதால் சமூகவிரோதிகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அண்மையில் பெண் மருத்துவர் ஒருவர் இதேபோன்று பாலத்தின் அடியில் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அக்குற்றத்தில் ஈடுபட்ட 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டபோதும், இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #GIRL DEATH #WESTBENGAL #BURNT TO DEATH