'50,000 கூலி தொழிலாளர்களுக்கு இலவச உணவு...' 'சமூக சமையலறை திறந்து...' சாதித்துக் காட்டிய பிரபல நிறுவனம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Apr 05, 2020 11:36 PM

அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் இருக்கும் 50,000 கூலி தொழிலாளர்களுக்கு சமூக சமையலறை என்னும் பெயரில் மஹிந்திரா நிறுவனம் உணவு வழங்கியுள்ளது.

The Mahindra Institute has provided food for 50,000 people

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வீதத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதில் பெரும்பாலும் சொந்த ஊரில் இருந்து பொருளாதாரத் தேவைக்காக வெளிமாநிலங்களுக்கு சென்றவர்களும், கூலி தொழிலாளிகளும் பாதிப்படைந்த சூழலில் அவர்களின் தேவைக்காக அரசு பல நிவாரணங்களை அறிவித்துள்ளது. மேலும் தன்னார்வலர்களும்,  தனியார் நிறுவங்களும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.

இதேபோல் இந்தியாவில் இயங்கி வரும் தனியார் நிறுவனமான மஹிந்திரா நிறுவனம் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு சமூக சமையலறையை உருவாக்கி இதுவரை ஒரு வாரத்தில் 50,000 உணவு பொட்டலங்களை வழங்கி உள்ளதாக மஹிந்திரா தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.டி., பவன் கோயங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.

இந்தியாவில் மொத்தம் 10 இடங்களில் திறக்கப்பட்டுள்ள இந்த சமூக சமையலறைகளில் ஒரு நாளைக்கு சுமார் 10,000 உணவுப் பொட்டலங்களை தயாரித்து தேவைப்படும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிவருகின்றனர். இதுமட்டுமில்லாமல் உணவு தேவைப்படுபவர்களுக்குச் சமையல் செய்வதற்கான சமூக சமையலறைக்கான உள்கட்டமைப்பை வழங்க உள்ளதாகவும் பவன் கோயங்கா அவரது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மஹிந்திரா நிறுவனம்

வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் வென்டிலேட்டர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மும்பை உள்ள காண்டிவலி பகுதியில் முகக்கவசங்கள் தயாரிக்கும் பணிகளையும் தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அவரது நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் முதல் 50,000 முகக்கவசங்களை மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சுகாதார தொழிலாளர்களுக்கு இலவசமாக அளிக்கப்போவதாக கோயங்கா அறிவித்துள்ளார்.

 

Tags : #FOOD