'பாலில் அதிக நச்சுத் தன்மை!' ..முதலிடமே உங்க மாநிலம்தான்!.. மத்திய அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 22, 2019 06:43 PM

நச்சுத் தன்மை கலந்த பாலை விநியோகிப்பதில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக மத்திய சுகதாரத் துறை அமைச்சர் கூறியுள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Milk quality is not safe in TN, Says central minister

மக்களவையில் இதுபற்றிய பேச்சை தொடங்கிய, திமுக உறுப்பினர் டி.ஆர் பாலு எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே பதில் அளித்தார், அந்த பதிலில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் நச்சுத்தன்மை கலந்த பால் தமிழகம், கேரளா, டெல்லி விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக இம்மாநிலம்ங்களில் விற்கப்படும் பாலில் அப்ளாடாக்சின் எம்.1 (aflatoxin m 1) என்கிற குறிப்பிட்ட வகை நச்சுதன்மை கலந்திருப்பதாகக் கூறிய அவர்,  பாலில் அதிக நச்சுத் தன்மை உள்ள மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளர்.

Tags : #MILK #FOOD #SAFETY #QUALITY