‘ஊரடங்கு உத்தரவு எதிரொலி’.. பால் விற்கும் நேரத்தில் மாற்றம்.. வெளியான முக்கிய அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு உத்தரவின் காரணமாக நாளை முதல் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும்தான் பால் விற்பனை செய்யப்படும் என பால் முகவர்கள் சங்கள் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர மக்கள் தேவையில்லாமல் வெளியே நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான பால் விற்பனைக்கு அச்சங்கத்தினர் சில கட்டுபாடுகளை விதித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் நாளை முதல் பால் முகவர்கள் அனைவரும் சில்லறை கடைகளுக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்றும், பால் முகவர்களின் கடைகளில் அதிகாலை 3.30 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என பால் முகவர்கள் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பால் தட்டுபாடு எனக் கூறி சிலர் 1 லிட்டர் பாலை 100 ரூபாய்க்கு விற்று வருவதாகவும், அவ்வாறு பாலை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் குறித்த தகவலை தங்களது சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.