'ஒரு லிட்டர் இவ்வளவு ரூபாயா?'.. 'பெட்ரோல் விலையை முந்திய பால் விலையேற்றம்'.. அதிர்ச்சியில் மக்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Sep 11, 2019 11:19 AM
பால் விலையேற்றம் என்பது பொதுவாகவே வளர்ந்து வரும் எல்லா நாடுகளின் பொருளாதார சமநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தகூடிய காரணி.

ஆனாலும் அந்த விலையேற்றம் என்பது மிகவும் சிறிய அளவில் இருந்தாலும் நாட்டின் பொருளாதார சூழலிலும், ஏகோபித்த சந்தையிலும், ஏற்றுமதி-இறக்குமதிகள் நிகழும் அன்னியச் செலாவணியிலும் பெருத்த மாற்றத்தை உருவாக்கும்.
அண்மையில், தமிழகத்தில் ஆவின் பால் விலையேற்றம் பெருத்த விவாதப் பொருளாக மாறியது. ஆனாலும் பெட்ரோல், டீசல் போன்ற கச்சா எண்ணெய்களுக்கு சமமாக பால் விலையேற்றம் இருந்தால் எப்படி இருக்கும்?
அப்படித்தான் பாகிஸ்தான் பால் விலையேற்றம் பெட்ரோல் டீசலை விடவும் அதிகமாகியுள்ள சம்பவம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தீவனம், சந்தையில் பால் உற்பத்திக்கான தட்டுப்பாடு முதலானவற்றால், பால் விலை கராச்சி மற்றும் சிந்து மாகாணப் பகுதிகளில் லிட்டருக்கு 140 ரூபாயைத் தொட்டுள்ளது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், அங்கு பெட்ரோலே 113 ரூபாய்தான். இதுபற்றி பேசிய கராச்சி பால் விலைக் கட்டுப்பாட்டு கமிஷனர், முன்னதாக, பால் விலை 93 ரூபாயாகத்தான் நிர்ணயிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
