‘கொரோனாவுக்கு எதிர்ப்பு... பிரதமருக்கு ஒத்துழைப்பு!’.. ‘பால் விநியோகம் கட், ஹோட்டல்கள் க்ளோஸ்!’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 20, 2020 11:51 AM

மார்ச் 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் பால் விநியோகம் இல்லை என்று பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

we wont sell milk on march 22nd Tamil Nadu Cooperative Milk Producers

கொடிய நோயான கொரோனா அச்ச்றுத்தலால் வருகிற மார்ச் 22-ஆம் தேதி தேசிய ஊரடங்கு உத்தரவினை பிரதமர் மோடி கடைபிடிக்கச் சொல்லி வலியுறுத்தியுள்ள நிலையில், கொரோனாவை ஒழிக்கும் விதமாக பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை வரவேற்பைப் பெற்றுள்ளது. 

அதற்கு ஒத்துழைப்பு தரும் வகையில் மார்ச் 22-ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் பால் விநியோகம் செய்யப்பட மாட்டாது என்று தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பிரதமர் மோடியின் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உணவகங்கள் உள்ளிட்ட இன்னும் பிற வணிகக் கடைகள் மார்ச் 22-ஆம் தேதி மூடப்படுவதாக வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். 

Tags : #MILK #CORONAINDIA #MODICORONAMESSAG #MODISTRIKEONCORONA #CORONAVIRUSOUTBREAKINDIA