'லவ்' பண்ற பொண்ணா?... 'வீட்ல' பார்த்த பொண்ணா?... யாரை 'செலக்ட்' பண்றது,,, வேற 'லெவல்' முடிவெடுத்த 'இளைஞர்'... இந்த 90'ஸ் கிட்ஸ் பாவம்யா!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியப்பிரதேச மாநிலம் கெரியா என்னும் பகுதியை சேர்ந்தவர் சந்தீப். இவர், போபாலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்த போது பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

தனது காதல் குறித்து வீட்டில் தெரிவித்த போது , சந்தீப்பின் பெற்றோர்கள் அவரது மகன் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், தாங்கள் பார்த்து வைத்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் சந்தீப்பின் பெற்றோர்கள் அவரை வற்புறுத்தியுள்ளனர். ஆனால், தான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் சந்தீப் உறுதியாக இருந்துள்ளார்.
இந்த விவகாரம் அந்த பகுதி பஞ்சாயத்து வரை செல்ல இது பற்றி மூன்று குடும்பத்தினரையும் உட்கார வைத்து பஞ்சாயத்து தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது மூன்று குடும்பத்தினரும் இணைந்து இரண்டு பெண்களையும் சந்தீப்பிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து சில தினங்களுக்கு முன், தனது காதலி மற்றும் வீட்டில் பார்த்த பெண் உட்பட இரண்டு பேருடனும் இளைஞர் சந்தீப்பின் திருமணம் நடைபெற்றது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக நகர்ப்புற அதிகாரிகள் அனுமதியுடன் தான் திருமணம் நடத்த வேண்டும் என்ற நடைமுறை உள்ள நிலையில், சந்தீப் திருமணம் நடைபெற அப்படி ஏதும் அனுமதி கொடுக்கவில்லை. இது தொடர்பாக, அதிகாரிகள் இந்த திருமணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.

மற்ற செய்திகள்
