‘எனக்கு அந்த வாய்ப்பை கொடுங்க’!.. ‘ரத்தத்தால் அமித்ஷாவுக்கு கடிதம்’!.. அதிரவைத்த விளையாட்டு வீராங்கனை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Dec 16, 2019 12:44 PM

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்க வேண்டும் என சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Vartika Singh writes letter in blood to Amit Shah

டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நான்கு பேருக்கும் தூக்குதண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இவர்களது தூக்குதண்டனை நிறைவேற்றும் பணி தற்போது திஹார் சிறையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்க வேண்டும் என சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதன்மூலம் பெண்களால் தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியும் என் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தை அவர் ரத்தத்தால் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #AMITSHAH #VARTIKASINGH #NIRBHAYA