VIRAT KOHLI : அவுட்டா இல்லையா..? டெஸ்ட் தொடரில் சர்ச்சை.. ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து வைரலாகும் கோலியின் ரியாக்‌ஷன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By K Sivasankar | Feb 18, 2023 06:14 PM

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையான இரண்டாவது டெஸ்ட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

DRS Debacle Was Virat Kohli out or not out? 2nd Test IND vs AUS

முன்னதாக இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் சூழலில் அடுத்தடுத்து போட்டிகளில் வென்று இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி முன்னேறும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இப்படி ஒரு சூழலில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆடி இருந்த ஆஸ்திரேலிய அணி 263 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி இருந்தது.  தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிவரும் இந்திய அணி வரை ஏழு வீக்கெட்டுகளை இழந்து 200 ரங்களுக்குள் மேல் குவித்துள்ளது. இந்த நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி அவுட்டாகி இருந்த விதம் தான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், விராட் கோலி எல்பிடபிள்யூ அவுட் ஆனதாக நடுவர் அறிவித்திருந்தார். ஆனால் உடனடியாக விராட் கோலி டி ஆர் எஸ் கேட்க, அப்பந்து விராட் கோலி பேட்டிலும், அவரது கால் பேடிலும் ஒரே நேரத்தில் படுவது தெரிகிறது. இதற்கு முன்பும் இதேபோன்று பலமுறை நடந்து lbw முறையில் விராட் கோலி அவுட் ஆகி வெளியேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கையில் தற்போது மூன்றாம் அம்பயருக்கு முடிவு சென்றது. அவரும் இதனை அவுட் என அறிவித்திருந்தது சலசலப்பை உண்டு பண்ணி உள்ளது. பேட்டில் பந்து பட்ட போதும் இதை மூன்றாம் நிலை ஒரு அவுட்டென அறிவித்திருந்த சூழலில் முதலில் நடுவர் அவுட் என குறிப்பிட்டதன் காரணமாகத்தான் அவர் அப்படியே அறிவித்ததாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

DRS Debacle Was Virat Kohli out or not out? 2nd Test IND vs IAUS

அதேபோல பேட்டிலும் காலில் பேடிலும் ஒரே நேரத்தில் பட்டால் அது அவுட்டென எடுத்துக் கொள்ளப்படக் கூடாது என்றும் பேட்டில் பட்டதை தான் குறிப்பிட்டு நாட் அவுட் என குறிப்பிட வேண்டும் என சில விதிகள் பற்றியும் ரசிகர்கள் இணையத்தில் தற்போது பேசி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க அவுட்டான விராத் கோலி டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்று தான் அவுட் ஆன விதத்தை வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்கும் இருக்கும் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.

Tags : #VIRAT KOHLI LBW

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. DRS Debacle Was Virat Kohli out or not out? 2nd Test IND vs AUS | Sports News.