'அவங்க 'சிஎஸ்கே' ஓனரா இருக்காங்க'...அப்புறம் எப்படி?...'திராவிட்' மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Nov 15, 2019 09:30 AM
இந்திய அணியின் முன்னாள் பிரபல வீரரான, ராகுல் திராவிட் மீது எழுந்த சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வீரரான ராகுல் திராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பணிபுரிந்து வரும் நிலையில், அவர் எப்படி இந்தியா சிமெண்ட்ஸில் துணை தலைவராக இருக்க முடியும்என்ற சர்ச்சை எழுந்தது. அதற்கு காரணம், இந்தியா சிமெண்ட்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறது. இதையடுத்து ராகுல் திராவிட் இரட்டை பதவி ஆதாயம் அடைந்து வருவதாகவும் குற்றசாட்டு எழுப்பப்பட்டது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயின் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி டி.கே.ஜெயின் ராகுல் திராவிட்டிற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு ராகுல் திராவிட் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ராகுல் திராவிட் மீது இருந்த இந்த இரட்டைப் பதவி ஆதாய புகார் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி டி.கே.ஜெயின், ''ராகுல் திராவிட் மீது சுமத்தப்பட்ட இரட்டை பதவி ஆதாயம் குறித்த புகாரில் எந்தவித முகாந்திரமும் இல்லை. எனவே ஆவர் மீதான குற்றசாட்டு நிராகரிக்கப்படுவதாக கூறியுள்ளார்.