‘வெளில சொல்ல எவ்ளோ ட்ரை பண்ணேன்..’.. 'மெடிக்கல் காலேஜ் பெண்ணை.'..3 டாக்டர்களுக்கும் பெயில்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Aug 09, 2019 05:37 PM
மும்பையில் பிரபல மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பழங்குடி இனப் பெண் ஒருவர் ஒதுக்கீட்டுப் பிரிவில் சலுகை பெற்று முதுகலை மருத்துவம் படிக்கச் சென்றார். அவர் ஒதுக்கீட்டுப் பிரிவில் மருத்துவம் பயிலச் சென்றதாகவும், பழங்குடி இனத்தவர் என்பதாலும் 3 மருத்துவர்கள் வக்கிரத்தோடு அந்த பெண்ணிடம் நடந்துகொண்டுள்ளனர்.

அந்த மூவரும் அந்த பெண்ணை, இந்த வக்கிரத்தால் துன்புறுத்தியதை அடுத்து, தங்கியிருந்த விடுதியில் இருந்து கடிதம் எழுதிவைத்துவிட்டு அப்பெண் தற்கொலையும் செய்துகொண்டார். அதன் பின்னர் அப்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் மருத்துவர்கள் விசாரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கடந்த மே மாதம் நடந்த இந்த சம்பவத்துக்கு பின்னர், தற்போது அந்த 3 மருத்துவர்களுக்கும் நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர்கள் மூவரும் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கும் வரையில் அவர்கள் தொடர்ந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்கொலைக்கு முன்னதாக, அப்பெண் எழுதிய கடிதத்தில், ’நான் இதுபற்றி மேடமிடம் பேச எவ்வளவோ முறை முயற்சி செய்தேன். பேசவும் முன்வந்தேன். அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. எனக்கு என் வாழ்வை முடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.
