‘5 வயது, 5 கிலோ மீட்டர், மெரினாவில் நீந்தி சாதித்த சிறுமி’.. குவியும் பாராட்டுக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 22, 2019 06:22 PM

சென்னை மெரினா கடலில் 5 வயது சிறுமி 5 கிலோ மீட்டர் நீந்தி சாதனை படைத்துள்ளார்.

WATCH: 5 year old child swimming in merina beach

ஒன்றாம் வகுப்பு படிக்கும் லோகிதா சராக்‌ஷி என்ற சிறுமி மெரினா கடலில் நீந்தி அசத்தியுள்ளார். இன்று காலை 6:30 மணியளவில் பட்டினப்பாக்கம் முதல் கண்ணகி சாலை வரை உள்ள 5 கிலோ மீட்டர் தொலைவை நீந்தி கடந்துள்ளார்.

இதற்கு சிறப்பு விருந்தினராக வந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சாதனை புரிந்த சிறுமி லோகிதா சராக்‌ஷிக்கு சான்றிதல் வழங்கினார். இது குறித்து பேசிய அவர்,‘லோகிதாவின் அப்பா சிட்டி போலிஸ் காஸ்டபிலாக உள்ளார். அவரும் ஒரு நீச்சல் வீரர் தான். லோகிதாவின் இந்த சாதனை இந்த வயதில் உள்ள குழந்தைகளுக்கு ஒரு தூண்டுகோலாக இருக்கும். இன்னும் அதிகமான சாதனைகளை செய்ய என்னுடைய வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுமியின் பயிற்சியாளார் கே.எஸ் இளங்கோவன் பேசியதாவது,‘தேனியில் நடந்த நீச்சல் போட்டியில் லோகிதா 4 தங்கம், 1 சில்வர் வென்றார். லோகிதாவை அதிக தொலைவு நீச்சல் போட்டிக்கு தயார் செய்ய அவரது அப்பாவிடம் பேசினேன். கடந்த ஒரு மாதமாக லோகிதா இந்த பயிற்சியை செய்துள்ளார்’ என தெரிவித்துள்ளார்.

Tags : #CHENNAI #CHILD #SWIMMING #MERINA