‘கோவையில் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட 2 வயது குழந்தை’.. தாய் மாமா அளித்த பகீர் வாக்குமூலம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jun 25, 2019 11:03 PM

கோவையில் தாயின் அருகில் தூங்கிய குழந்தை மர்மமான முறையில் கிணற்றில் சடலமாக கிடந்ததது தொடர்பாக குழந்தையின் தாய்மாமாவை போலிஸார் கைது செய்துள்ளனர்.

2 year old child murder baby’s uncle has been arrested

கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதியில் கனகராஜ் என்பவர் ஜேசிபி இயந்திரந்தை வாடக்கைகு விடும் தொழில் நடத்தி வருகிறார். இவரது மனைவி காஞ்சனா. இவர்களுக்கு அம்ருதா என்ற 2 வயது பெண் குழந்தை இருந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காஞ்சனா விளங்குறிச்சியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றுள்ளார்.

ஆனால் மறுநாள் காலை தாயின் அருகில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை காணமல் போயுள்ளது. இதனால் காவல் நிலையத்தில் குழந்தையின் குடும்பத்தார் புகார் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து போலிஸார் நடத்திய தீவிர தேடுதலில், குழந்தை வீட்டின் எதிர்புறம் உள்ள பாழுங்கிணற்றில் சடலமாக இருந்ததை கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து மர்மமான முறையில் குழந்தை இறந்தது தொடர்பாக குடும்பத்தினர் ஒவ்வொருவருடனும் போலிஸார் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது குழந்தையின் தாய்மாமா ரகுநாதன் என்பவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனால் ரகுநாதனிடம் போலிஸார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது குழந்தையை கொலை செய்ததை ரகுநாதன் ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர், மதுபோதையில் இருந்தபோது குழந்தையை வீட்டிற்கு வெளியே தூக்கிச் சென்று பாலியல் ரீதியலாக துன்புறத்த முயன்றதாகவும், அப்போது குழந்தை சத்தமிட்டு அழுததால் வாயை மூடிய போது மூச்சு திணறி இறந்ததாகவும், இதனை மறைக்க அருகில் இருந்த பாழுங்கிணற்றில் வீசியதாகவும் போலிஸாரிம் ரகுநாதன் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் குழந்தையின் பிரேதசப் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர்தான் குழந்தை பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளதா என்பது போன்ற தகவல்கள் வெளிவரும் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags : #HARASSMENT #CHILD #COIMBATORE