'பாத்ரூம் கண்ணாடியில் இருந்த'... '14 வயது சிறுமியின் அதிர்ச்சி குறிப்பு'... 'தாய்க்கும், மகனுக்கும் அடுத்தடுத்து நேர்ந்த பயங்கரம்'... 'மாநிலத்தையே உலுக்கியுள்ள சம்பவம்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாலக்னோவில் 14 வயது சிறுமி தன்னுடைய தாயையும், சகோதரனையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த ரயில்வே துறை உயர் அதிகாரிகளான ஒரு தம்பதியின் 14 வயது மகள், முன்னதாக தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் சமீபமாக மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று சிறுமி வீட்டின் குளியலறையில் இருந்த கண்ணாடியில் ஜாமை வைத்து 'வாழத் தகுதியற்ற மனிதப்பிறவி' என எழுதிவிட்டு, அந்த கண்ணாடியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதன் பின்னர் அவர் குளித்துக் கொண்டிருந்த தன்னுடைய தாய் மற்றும் சகோதரரை அடுத்தடுத்து தலையில் சுட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன் குளியலறை கண்ணாடியில் இருந்தது சிறுமியின் கையெழுத்துதான் என்பதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர். மேலும் அப்போது சிறுமி தன்னுடைய கையிலும் வெட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. சிறுமி ஏன் தாயையும், சகோதரரையும் கொலை செய்தார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், அவர் மனஅழுத்தத்தில் அப்படி செய்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 வயது சிறுமி ஒருவர் தாய் மற்றும் சகோதரரை சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

மற்ற செய்திகள்
