'கண்ணாம்பூச்சி விளையாட போன பொண்ணு'... 'வீட்டுக்கு வந்ததும் ஒரே வயிறு வலி'... நெஞ்சை ரணமாக்கும் கொடூர சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாவீட்டிற்கு அருகே உள்ள சிறுவர்கள் கண்ணாம்பூச்சி விளையாடலாம் என அழைத்ததால் சென்ற சிறுமிக்கு நடந்துள்ள கொடூரம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுராவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் சிறுமி ஒருவர் 3ம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் வீட்டின் அருகே உள்ள சிறுவர்கள் சிலர் கண்ணாம்பூச்சி விளையாட வா என அழைத்துள்ளார்கள். தெரிந்த அண்ணன்கள் தானே என நினைத்து அந்த சிறுமி அவர்களுடன் விளையாடச் சென்றுள்ளார். அப்போது மறைவான பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் 6 பேரும் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள்.
பின்னர் வீட்டிற்கு வந்த சிறுமி வயிற்று வலியால் துடித்துள்ளார். இதையடுத்து பதறிய சிறுமியின் பெற்றோர்கள் என்ன நடந்தது எனக் கேட்டுள்ளார்கள். அப்போது தனக்கு நடந்த கொடுமை குறித்து சிறுமி கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியில் உடைந்து போன பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்கள். இதையடுத்து 6 பேரும் கைது செய்யப்பட்டார்கள். இதில் 4 பேர் சிறுவர்கள் என்பது தான் அதிர்ச்சியில் உச்சம்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், 6 பேரைக் கைது செய்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள ஒருவனைத் தேடி வருகிறார்கள். இதில் 4 பேர் சிறுவர்கள் என்பதால் அவர்கள் 4 பேரும் சிறார் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ் என வந்துள்ளதை அடுத்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நம்பி விளையாடச் சென்ற சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே இது சாதாரணமாக நாம் கடந்து செல்லும் விஷயம் அல்ல எனக் கூறியுள்ள சமூக ஆர்வலர்கள், சிறுவர்கள் மனதில் ஏன் இதுபோன்ற வக்கிரமான எண்ணம் வருகிறது, அவர்கள் ஏன் தவறான பாதைக்குச் செல்கிறார்கள், அதுபோன்ற சூழல்கள் உருவாகக் காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்கள். அறம் குறித்த சிந்தனைகள் சிறு வயது முதலே அவர்களது மனதில் விதைக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது.

மற்ற செய்திகள்
