'ரோட்டு சைட்-ல தூங்கிட்ருந்த மூணரை வயசு குழந்தை...' 'திடீர்னு பாலத்துக்கு அடியில அழுற சத்தம்...' - நெஞ்சை உறைய செய்யும் உச்சக்கட்ட கொடூரம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Aug 27, 2020 03:02 PM

மும்பையில் சாலை ஓரம் தூங்கிக்கொண்டிருந்த மூன்றரை வயது குழந்தையை 20 வயது இளைஞர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Mumbai Railway Bridge youth abused three and half old girl

தங்குவதற்கு இடமில்லாத ஏழை, எளிய மக்கள் சாலை ஓரங்களிலும், ரயில்வே நிலையங்களிலும் படுத்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவ்வாறு மும்பையின் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பாலத்தின் கீழே உறங்கிய ஒரு குடும்பத்தின் மூன்றரை வயது பெண் குழந்தையை திங்களன்று 20 வயது இளைஞர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

முகம் அறியாத அந்த 20 வயது மர்ம நபர் அதே சென்ட்ரல் ரயில் நிலையத்தின் சாலையோரம் இருக்கும் கடையில் வேலை செய்பவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த கொடூர சம்பவம் குறித்து கூறிய போலீசார், அதிகாலை சுமார் 3 மணியளவில் தாயின் பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை 20 வயது நபர் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

அதையடுத்து செவ்வாய்க்கிழமை காலையில் பாலத்தின் மறுபுறம் குழந்தை அழும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சென்று பார்க்கும் போது, குழந்தை இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கு தகவல் அளித்த அப்பகுதி மக்கள், குழந்தையையும் அவரின் தாயாரையும் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர் என போலீசார் குறிப்பிடுகின்றனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் காணப்படும் சி.சி.டிவி காட்சிகளை கண்டறிந்துள்ளனர். அதில் தேடப்பட்டுவரும் 20 வயது இளைஞர் சம்பவம் நிகழ்ந்த அன்று பாலத்தின் அதே பகுதியில் துணி விரித்து படுத்திருந்ததாக கூறியுள்ளனர். மேலும் அந்த மர்ம இளைஞரின் உள்ளாடையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி மும்பையின் ஜே. ஜே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாலையோரம் இருந்த குழந்தையின் மீது கொடூர  செயலை நிகழ்த்திய இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mumbai Railway Bridge youth abused three and half old girl | India News.