‘மக்கள் கூட்டமாக திரள்வது பேராபத்தை ஏற்படுத்தும்’.. மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட மாநில அரசு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பையில் மதுக்கடைகளை திறப்பதற்கான உத்தரவை மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று மும்பையில் 653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தாக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மும்பையில் 9758 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் மதுப்பானக்கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது. இதனை அடுத்து கர்நாடகா, உத்தரப்பிரதேசம், ஆந்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதேபோல் மும்பையிலும் மதுக்கடைகள் திறப்பதாக அரசு அறிவித்ததும், மக்கள் கூட்டம் கூட்டமாக கூட தொடங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன்மூலம் சமூக இடைவெளிகள் சிறுதும் கடைபிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டு, கொரோனா பரவல் வேகமாக பரவும் ஆபத்து இருப்பதால் மும்பை மாநகராட்சி அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடை தவிர மதுக்கடை உள்ளிட்ட மற்ற கடைகள் திறக்க தடை விதித்தது. இதனால் இன்று முதல் (06.05.2020) மதுக்கடைகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மும்பையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் மதுக்கடைகளை திறப்பதால் சமூக இடைவெளியின்றி மக்கள் திரள்வது பேராபத்தை உண்டாக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
