வீட்டுக்கே 'டோர் டெலிவரி' பண்றோம்... ஒரு பைசா கூட 'எக்ஸ்ட்ரா' குடுக்க வேணாம்... அதிரடியாக அறிவித்த மாநிலம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலத்தில் வீடுகளுக்கு சென்று மதுவிற்பனை செய்யும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த வாரம் ஆங்காங்கே மதுக்கடைகள் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பின் திறக்கப்பட்டதால் அனைவரும் முண்டியடிக்க சமூக இடைவெளி காற்றில் பறந்தது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து மதுக்கடைகள் முன் கூட்டம் திரளுவதை தடுக்கும் நடவடிக்கையாக வீட்டுக்கு சென்று மது விற்பனை செய்யும் திட்டத்தை மாநில அரசு அறிவித்தது. இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி வீடுகளுக்கு சென்று விற்பனை செய்ய ஒரு கடை உரிமையாளர் 10 டெலிவரி செய்யும் ஊழியர்களை மட்டுமே நியமித்து கொள்ளலாம். ஒவ்வொருவரும் 24 பாட்டில்களுக்கு மேல் மதுபானத்தை எடுத்து செல்ல முடியாது. மேலும் கடை உரிமையாளர்கள் மதுபாட்டிலில் உள்ள எம்.ஆர்.பி. விலைக்கு மேல் கட்டணம் வசூலிக்கக்கூடாது.
ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்வது விற்பனையாளருக்கும், வாங்குபவருக்கும் இடையிலான எழுதப்படாத ஒப்பந்தமாகும். எனவே அவர்களுக்கு இடையே எந்தவொரு பிரச்சினைக்கும் அரசு காரணமாகாது. ஆன்லைனில் விற்பனை செய்தாலும் மதுபான கடைகளில் ஊழியர்கள் சமூக விலகல் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என கலால் துறை தெரிவித்துள்ளது.
