'சிகிச்சை' பெறும் கொரோனா நோயாளிகளுக்கு 'அருகிலேயே' உயிரிழந்தவர்களின் 'உடல்கள்'... வைரலாகும் வீடியோவால் 'அதிர்ச்சி'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | May 07, 2020 05:37 PM

மும்பை மருத்துவமனை ஒன்றில் கொரோனா சிகிச்சை வார்டிலேயே உயிரிழந்தவர்களுடைய உடல்களும் வைக்கப்பட்டிருந்ததாக அதிர்ச்சி தரும் வீடியோ ஒன்று பரவி வருகிறது.

Video Shows Bodies Near Corona Patients In Mumbai Hospital Ward

மும்பையிலுள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் வார்டிலேயே அவர்களுடைய படுக்கைகளுக்கு அருகில் சுமார் 7 உயிரிழந்த உடல்கள் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் நோயாளிகளைக் கவனித்துக் கொள்ள வருபவர்களும் எந்தவித அதிர்ச்சியுமின்றி அந்த உடல்களை கண்டும் காணாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ள பாஜகவைச் சேர்ந்த நிதேஷ் ரானே, "மருத்துவமனையில் நோயாளிகள் உயிரிழந்த உடல்களுக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவது மிகவும் மோசமானது. இது வெட்கக்கேடு" எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து விளமளித்துள்ள அந்த மருத்துவமனை டீன், "இது கொரோனா தீவிரமாக பரவத் தொடங்கிய போதிருந்த நிலையாகும். கொரோனாவால் உயிரிழந்தவர்களுடைய  உடல்களை அவர்களுடைய உறவினர்கள் வாங்க தாமதமானதாலேயே ஒரு அரை மணி நேரம் இந்த நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. இங்குள்ள மார்ச்சுவரியில் 15 உடல்கள் மட்டுமே வைக்க முடியும் என்ற நிலையில், ஏற்கெனவே 11 உடல்கள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் மற்ற காரணங்களால் உயிரிழந்தவர்களுடன் கொரோனாவால்  உயிரிழந்தவர்களுடைய உடல்களை வைப்பதும் இயலாதது" எனக் கூறியுள்ளார்.