'இதுவரை' இல்லாத அளவுக்கு... 'இன்று' ஒரே நாளில் '778 பேருக்கு' கொரோனா... மொத்த பாதிப்பு 6000ஜக் கடந்த 'மாநிலம்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Apr 24, 2020 12:48 AM

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Maharashtra Records 778 Coronavorus Cases 14 Deaths In A Day

இந்தியாவில் தீவிரமாக கொரோனா பரவத் தொடங்கிய போதிருந்து மோசமான பாதிப்பை சந்தித்து வரும் மகாராஷ்டிராவில் நாளொன்றுக்கு சராசரியாக 400 பேர் வீதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மும்பை நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,427 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு இன்று ஒரே நாளில் 14 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.