'லாக்டவுனுக்கு' முன்பே கிளம்பிய 'அறைத்தோழிகள்!'.. அபார்ட்மெண்ட்டில் 'அழுகிய' நிலையில் கண்டெடுக்கப்பட்ட 'இளம்' விமான பணிப்பெண்ணின் 'சடலம்!'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Apr 30, 2020 11:42 PM

மும்பையில் 29 வயதான இளம் பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Air Hostess body Found Decomposed Flatmates Left City before lockdown

விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்துகொண்டு வந்த சுல்தானா என்கிற இளம் பெண், தனது தோழிகளுடன் மும்பையின் பொடர்வாடி பகுதியில் வசித்து வந்துள்ளார்.  ஆனால் அப்பெண்ணின் தோழிகள் லாக்டவுனுக்கு முன்னதாகவே வெளியூர் சென்ற நிலையில் சுல்தானா மட்டும் தனியாக அப்பகுதியில் உள்ள ராஜலக்‌ஷ்மி பில்டிங்ஸின் ஒரு பிளாட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் வசித்து வந்த பிளாட்டில் இருந்து உடல் அழுகிய துர்நாற்றம் ஏற்பட்டதை அடுத்து, அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீஸார் அப்பெண்ணின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு, விசாரணை நடத்தி வருகின்றனர்.