‘ஒரே பிளானில் இத்தனை ஆஃபரா! ’.. ‘பிரபல நிறுவனம் வெளியிட்டுள்ள அசத்தல் அறிவிப்பு’..

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Saranya | Nov 07, 2019 03:50 PM

வோடஃபோன் நிறுவனம் ரூ.999க்கு RedX எனும் அசத்தல் போஸ்ட்பெய்ட் பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

Vodafone RedX Rs 999 Postpaid Plan Offers Netflix Amazon And More

வோடஃபோன் நிறுவனம் மாதத்திற்கு ரூ.999 செலுத்தினால் 20 ஆயிரம் ரூபாய்க்கான ஆஃபர்களை வழங்கும் புதிய போஸ்ட்பெய்ட் பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ரூ999 போஸ்ட்பெய்ட் பிளானுடன் அன்லிமிடட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், ஜீ5, வோடஃபோன் ப்ளே,  இலவச சர்வதேச ரோமிங், 15% ஹோட்டல் புக்கிங் தள்ளுபடி, ஏர்போர்ட்டில் இலவச அறை வசதி, விமான டிக்கெட் புக்கிங்கில் 10% தள்ளுபடி ஆகிய ஆஃபர்களை அளிக்கிறது வோடஃபோன்.

மேலும் அத்துடன் அடுத்த 6 மாதங்களுக்கு சாம்சங் ஃபோன் வாங்கினால் தள்ளுபடி, வழக்கத்தைவிட 50% கூடுதல் இணைய வேகம் ஆகியவையும் இந்த பிளானில் வழங்கப்படுகிறது.  போஸ்ட்பெய்ட் பிளானான இந்த RedX ஆஃபர் குறைந்த கால சலுகை மட்டுமே எனக் கூறியுள்ள வோடஃபோன் நிறுவனம் இந்த ஆஃபர் முதலில் வரும் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே எனத் தெரிவித்துள்ளது.

இந்த சலுகையைப் பெற வாடிக்கையாளர்கள் My Vodafone app அல்லது வோடஃபோன் இந்தியா இணையதளம் மூலம் பதிவு செய்துகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கு குறைந்தபட்சம் 6 மாத சந்தாவை ஒரே முறையில் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags : #VODAFONE #POSTPAID #PLAN #NETFLIX #AMAZON #OFFER #REDX #AIRTEL #JIO #BSNL